திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் மௌலீஸ்வரன் என்பவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பணியின் போது மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.