Skip to content

திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15) ஆகியோரும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ஆர்.சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு முடிந்ததும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். தீயணைப்பு வீரர்கள் இரவு வரை தேடியும் நீரில் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று காலை தேடும் பணி தொடங்கியது. முதலில் மணலில் சிக்கியிருந்த ஜாகிர்உசேனின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக  நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் சிம்புவின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு மாணவரான விக்னேஷின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மாணவரை தேடுவதற்கு வசதியாக முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தேடுதல் பணி நடந்த நிலையில் இரவு 10 மணியளவில் விக்னேஷின் உடலும் மீட்கப்பட்டது.

error: Content is protected !!