திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று .
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உய்யகொண்டான் ஆற்றின் படித்துரையிலிருந்து. இருந்து சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்தி, காவடி
எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்து மிளகு பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ புத்தடி மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.