திருச்சி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நேரு பூங்காவில் சாரண இயக்கத்திற்கான புதிய கட்டிடத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். முசிறி மாவட்டக் கல்வி அலுவலர் மதியழகன் அவர்கள் முன்னிலை வகித்தார். சாரண மாவட்ட செயலர்
ஜெயமூர்த்தி, பயிற்சி ஆணையர் சலீம், அமைப்பு ஆணையர்கள் திருமலை, நாகராஜன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.