தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகமாக பெய்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை பெய்கிறது.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது. திருச்சி நகரில் திடீரென 10 மணி அளவில் மேகம் திரண்டு ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. இதனால் திருச்சி நகரில் வெப்பம் தணிந்து உள்ளது. கரூர் பைபாஸ் ரோடு, சென்னை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஜங்ஷன் பகுதியிலும் லேசான மழை தூறல் போட்டது. திருச்சி புறநகர் பகுதியான முசிறியிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இன்று காலை கோடை மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்காற்று வீசுவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.