அனுமந்த ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல இடங்களில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 லட்சத்து 8 வடமாலை திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூன்று
நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் 100008 வடை மாலை சாற்றப்பட்டு மகா தீபாவதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் சுரேஷ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.