Skip to content

எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் மறைந்த புகழேந்தி( சங்கமம்-97 உறுப்பினர்- SGM-TRIC-2226 & TRIC-054 ) குடும்பத்தினருக்கு நமது சங்கமம் குழு மூலம் திரட்டி கொடுத்த நிதித்தொகை ரூ. 13,42,000/- த்தில் இதுவரையில் ரூ. 12,42,000/-த்தை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வங்கி கணக்கிற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது.

தற்போது மீதமுள்ள தொகை ரூ. 1,00,000/-மற்றும் கடலூர் பயிற்சி பள்ளி நண்பர்களின் பங்களிப்பு ரூபாய் 87,000/ ஆக மொத்தம் ரூபாய் 14,25,000.

மேற்கண்ட தொகை இன்று( 28.9.23)அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த தகவலை திருச்சி மாநகர சங்கமம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!