திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குடமுழுக்கு விழா நடைபெற்ற நாளன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெறும்.
அந்த வகையில் இன்று முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சமயபுரம் பகுதியில் உள்ள புது தெரு கடைவீதி, புது மேட்டு தெரு, சொக்கலிங்கம் காலனி, சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகள் வழியாக முத்துமாரி அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அம்மன் ஊர்வலம் வந்த பகுதிகள் முழுவதும் உள்ள வீடுகளில் தேங்காய்
உடைத்து அம்மனை வழிபட்டனர். மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலம் கொண்டுவரப்பட்டு,
முத்துமாரியம்மனுக்கு இறுதியாக ஆராதனை நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புது தெரு பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.