சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலிக்கு தமிழகம் மட்டுமல்லாத வெளி மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செல்வார்கள்.
இந்நிலையில் சமயபுரம் அருள்மிகு மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மகா நவசண்டி ஹோமம் கோவில் இணை ஆனையர் திருமதி கல்யாணி தலைமையில் நடைபெற்றது.
நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் 10க்கும் மேற்பட்ட குருக்கள் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணிவரை விக்னேஷ் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தேவி
ஆவாஹனம், பைரவர் பலி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகாசண்டி ஹோமம், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்றது. தொடர்ந்து திரவிய பூஜைகளுடன் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து கடகங்கள் புறப்பட்டு சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோசத்துடன் அம்பாளை தரிசனம் செய்தனர்.