திருச்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார்பில் இன்று புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு குறித்து பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் சங்கீதா சுரேஷ் துணைத்தலைவர் சுதா சிவா செல்வராஜ் கவுன்சிலர்கள் சிவாஜோதி,பானுமதி,ஞானவேல் ,
ராஜ்குமார் ,கருணாகரன் இலட்சியம் சசிகலா மற்றும் ஒரு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி மோகனூர் சாலை காட்டுப்புத்தூர் சாலை திருச்சி சாலை என் ஜி ஓ காலனி சாலை காவலர் குடியிருப்பு சாலை ஆண்டாபுரம் சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது மனித சங்கிலி பேருந்து நிலையத்தில் தொடங்கி தொட்டியம் முசிறி சாலை கடைவீதி வரை மனித சங்கிலி நடைபெற்றது.