திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
இறைவன் ஆன்மாக்களாகிய நாம் ஈடேற பல வடிவங்களில் திருக்கோயில்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற அமைப்பில் அருளிச் செய்கிறார். இவ்வாறு எல்லாம் ஒருங்கி அமையப்பெற்ற தலம் திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயில் ஆகும்.இத்தகைய பெருமை வாய்ந்த திருமங்கலம் ஊரில் ஆயர்குடியில் பிறந்தவர் ஆனாய நாயனார். இவர் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பரசுதாமீசுரம் உடையார் என்றும் திரு மழுவுடைய நாயனார் என்றும் சாமவேதீஸ்வரர் என்றும் பல திருநாமங்கள் கொண்ட சிவனார் மீது அதிக பக்தி கொண்டவர்.
இவர் பசுக்கூட்டங்களை மேய்ப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஆனாய நாயனார் புல்லாங்குழல் வாசிப்பதில் திறமையானவர். மாடுகளை காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்ப அழைத்து வரும்போதும் புல்லாங்குழல் வாசித்துக்
கொண்டேதான் இருப்பார்.அப்பொழுது ஆனாய நாயனார் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது.அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனாய நாயனார் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவம். கொன்றை மாலையை அணிந்து சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. ஆனாய நாயனார் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார்.ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களின் ஒருவராகவும் புல்லாங்குழலில் இறைவனது ஐந்தெழுத்தை உள்ளம் உருகி வாசித்த அளவில் இறைவன் மகிழ்ந்து உமாதேவியுடன் இடப வாகனத்தில் காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.ஆயான நாயனார் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும் கார்த்திகை அஸ்தம் நட்சத்திரத்தில் முக்தி கொடுக்கும் நாளில் நடைபெறும். இந்நிலையில் திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இவ்விழாவையொட்டி காலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.மாலையில் லோகநாயகி அம்பாள் சாமவேதீஸ்வரர்,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மகா தீபாதாரணை நடைப்பெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரம் மற்றும் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைப்பெற்று ஆயான நாயனார் அயிலை காட்சி ஐக்கிய விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.