Skip to content
Home » திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவப் பெருமாள் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். இக்கிராமத்தில் போதிய அத்தியாவசியம் எதுவும் இல்லை முக்கியமாக

போக்குவரத்து வசதி எதுவும் இல்லை எதுவும் வேண்டுமென்றால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற அவர்களது அத்யாசு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் இக்கிராமம் பெயரும் இடம் பெற்ற போது கிராம பொதுமக்கள் எங்களை மாநகராட்சி உடன் இணைப்பது எந்த வகையில் நியாயம் என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மன அழுத்தம் போராட்டம் செய்தனர். ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு சுமார் மூன்று மாதமாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை மேலும் சாலையை ஒட்டி உள்ள மண்ணை இழுத்து சாலையின் உயர்மட்ட அளவிற்கு போடப்பட்டுள்ளதால் சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையே கட்டப்பட்ட தடுப்பு அரண் ஆனது அங்கங்கே இடிந்து விழுகிறது இதற்கு ஒப்பந்ததாரர் இடிந்து விழுந்த பகுதிகளை சரி செய்து உடனடியாக சாலை பணியையும் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!