திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமுக தனலட்சுமி கல்லூரி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சூரியா தலைமையில் ஒரு பெண் உட்பட 39 பேர் ஈடுப்பட்டனர்.
அவர்களை திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள துவாக்குடி அரசு கலை கல்லூரி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்குமாநில துணைச் செயலாளர் மோகன் தலைமை வைத்தார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களை துவாக்குடி இன்ஸ்பெக்ட்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் பத்து நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.