இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா தலைமையில் பீமநகர் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில்: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 51-ஆவது வார்டு பீமநகர் பகுதியில் சாக்கடைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும்,பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் மக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை ஏற்பட்டு சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு மேயர் அவர்கள் நாளை காலை பீமநகர் பகுதிக்கு நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளை வரவழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்கள். இந்த சந்திப்பில் தெற்கு மாவட்ட துணை தலைவர் அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர்,மகளிர் அணி கிளைச் செயலாளர் ஜெயராணி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.