தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் லால்குடி அடுத்து அய்யன் வாய்க்கால்,
காமாட்சி நகரில் சோதனை செய்தபோது பக்ருதீன் (48) என்பவர் மூட்டை மூட்டையாக மறைத்து வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா மற்றும் 1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பக்ரூதினை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.