தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (5-1-2024) தொடங்கி வைத்தார்.
இந்த வகையில் திருச்சி மாநகராட்சி 53வது வார்டு ஒத்தக்கடை அருகே உள்ள குதுபாப்பள்ளத்தில் ரூ.5.14 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பொன்மலை மண்டல குழு தலைவர் துர்கா தேவி, திருச்சி மாநகராட்சி 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட திருச்சி அறிவுசார் மையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர்
பாலசுப்பிரமணியன், மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், திருச்சி மாநகராட்சி 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜ். மாமன்ற உறுப்பினர்கள் கமால் முஸ்தபா, ராமதாஸ், விஜயா ஜெயராஜ், திமுக 53வது வட்டச் செயலாளர் தனசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி 53வது வார்டு குதுப்பாபள்ளத்தில் ரூ 2.57 கோடியிலும், இதேபோல் பாலக்கரையிலும் அறிவுசார் மையம் என மொத்தம் ரூ.5.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையத்தில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு அறை, புத்தக அலமாரிகள், கழிவறைகள், வாகனம் நிறுத்தும் இடம், படிப்பக இருக்கைகள், தகவல் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.