தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது அந்தத் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகள் அடங்கும்
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி 46வது வார்டு கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்
கவுன்சிலர் ரமேஷ் மற்றும் வட்ட வழங்கல் துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர். இதே பல் திருச்சி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன இதற்காக அனைத்து ரேஷன் கடையிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி செல்கின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.