திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில் திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி ஆனந்த் தலைமையில் மகளிர் அணி பொதுச் செயலாளர் நிஷாராணி ஏற்பாட்டில் 70க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் கண்டன கோஷங்களை எழுப்பி மாநில அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
பெண்களுக்கு அனைத்து குடும்ப அட்டதாரருக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும். சமயபுரம் நால்ரோடு பகுதியில்
உள்ள டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட கோரி பெண்ணுரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமயபுரம் நால் ரோடு பகுதி மண்ணச்சநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன கோஷங்களோடு பாரதிய ஜனதா கட்சியினர் 70 க்கு மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.