இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதைத்தொடர்ந்து ஆண்கள் கழிவறை அருகே துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தபோது, அதில் பேஸ்ட் வடிவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 1.56 கிலோ. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 3 லட்சம். அந்த தங்க பேஸ்டை குப்பையில் போட்டது யார் என்பதை கண்டறிய விமான நிலையத்தின் காண்காணிப்பு காமிரா காட்சிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இலங்கை விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணி தான் இதனை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.