திருச்சி திருவெறும்பூர் அடுத்த பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, (36). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
இளையராஜாவுக்கு கனகா என்ற மனைவியும், இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான இளையராஜாவிடம், கனகா சண்டை போட்டுவிட்டு, இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு மகனுடன் வசித்து வந்த இளையராஜா, மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், நேற்று தனது வீட்டில், மனைவியின் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசா ரணை நடத்தினர்.