திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ் என்கிற கழுத்து வெட்டி காக்கா சுந்தர் (33) இவர் கடந்த 2022 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயபால் என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டிலும் இவரது பெயர் உள்ளது.
போலீசாருக்கு பயந்து சுந்தர்ராஜ் தனது வீட்டில் உறங்காமல் நண்பர்கள், உறவினர்கள் வீடும என மாறி மாறி இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளார் அப்படித்தான் போலீசாருக்கு பயந்து தனது சித்தப்பா சுந்தர்ராஜ் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் சுந்தர்ராஜன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்த அவரது சித்தப்பா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு உடனடியாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருச்சி எஸ் பி ஐ வருன்குமார் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி உள்ளது அப்பொழுது சுந்தர்ராஜ் ஏற்கனவே ஓட்டி வந்த மகேந்திரா வேன் முன்பு நாய் நின்றுவிட்டது. சுந்தரராஜின் தம்பி மாசி ராஜா அந்த வேனின் கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கியுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர் கலைவாணி குற்றவாளி கைரேகை பதிவு செய்தார்.இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.