Skip to content
Home » திருச்சி ரவுடி குத்திக்கொலை.. கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பேர் கைது…

திருச்சி ரவுடி குத்திக்கொலை.. கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பேர் கைது…

திருச்சி இ.பி.ரோடு கருவாட்டுப்பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணிக்குமார் (24). ரவுடியான இவர் மீது மீது கோட்டை, காந்தி மார்க்கெட், உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜோதி(40) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு
பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜோதிக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி, 2 கணவர்களும் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதேஷ்(19) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் பரணிக்குமாரும், ஜோதியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து பரணிக்குமாருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் பெண் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக பரணிகுமாருக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரணிக்குமார், ஜோதியை தாக்கியுள்ளார். இதைக்கண்ட மாதேஷ் மற்றும் அவரது நண்பனான 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பரணிக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சிங்காரத்தோப்பு நுழைவு வாயில் அருகே வந்த பரணிக்குமாரை பின்தொடர்ந்து வந்த மாதேசும், அந்த சிறுவனும் கத்தியால் அவரது கழுத்தில் குத்தி, கல்லால் தலையில் தாக்கினர். மேலும் ஜோதியின் தந்தையான மனோகரனும்(60), பரணிக்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பரணிக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பரணிகுமாரை பரிசோதித்து பார்த்த போது உயிர் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரணிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்ி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் மனோகரன் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும், ஜோதியை மகளிர் சிறையிலும் அடைத்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!