திருச்சி, செம்பட்டு, எம்.கே.டி காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20) இவர் புத்தாண்டு தினத்தில் தன் நண்பர்களான திருவளர்ச்சிபட்டி குருசாமி மற்றும் சுந்தர் ராஜூடன் ரோட்டோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் இவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் இம்மூவரும் காயமடைந்தனர்.
இது குறித்து 3 பேரும் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து இவர்களை தாக்கிய ஏர்போர்ட் செம்பட்டு, முஸ்லீம் தெருவைச் சேர்ந்த தமிம் அன்சாரி (29), ஏர்போர்ட் காமராஜ நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடிகளான தர்மசீலன் (25) மற்றும் சையது ரபீக் பாட்ஷா (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.