Skip to content

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும்  புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர்கள் கருப்பையா, ஜனார்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட பொருளாளர்கள் பிரேம்குமார், கருணாநிதி, ரவிச்சந்திரன், ஸ்ரீதர், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், முத்துக்கருப்பன், சந்திர சேனன், பொன்முடி, உதயகுமார்,வெங்கடேசன்,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் நவநீதன், மாநில துணை மாநில துணைத்தலைவர் செல்வராணி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.

போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை பணியாளர்கள் அரசாணையை கொளுத்த முயன்றனர். தடையை மீறி அரசாணையை தீயிட்டு கொளுத்த முயற்சி செய்த போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்தனர்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி  பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் ,மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை 140 ரத்து செய்ய வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

error: Content is protected !!