திருச்சி, கரூர் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த வார விழா சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சி திட்ட இயக்கம் திருப்பராய்துறை டோல் நிர்வாகம் சார்பிலும் நடைபெற்றது. சாலை விழிப்புணர்வு நிகழ்விற்க்கு முன்னாள் விமானபடை அதிகாரி தங்கராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.அய்யாரப்பா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு பிரசுரகங்களை வழங்கும் பணியிணை தொடங்கி வைத்தார் . மேற்கண்ட. நிகழ்வில் ஜநூறுக்கும் மேற்கண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரத்தை சாலை பயனீட்டாளர் அறக்கட்டளை அறங்கவலர்
ராஜசேகர் மற்றும் சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலைமகள் கரும்பாச்சலம், பெருகமணி லோகு மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக்கேயன் ஆகியோர் வழங்கினர். இவ்விழா நிகழ்வில் திருப்பராய்த்துறை டோல் நிர்வாக அலுவலர்கள் சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு சாலை பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு செய்யபட்டது.