திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் வெள்ளாந்தெரு முதல் முத்தரசநல்லூர் பழூர் பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் ரயில்வே லைன் அருகில் கொட்டி கிடந்த மணல் ஜேசிபி மூலம் அகற்றப்பட்ட மணல் அங்கேயே பரவி கிடப்பதால் இரண்டு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மேலும் வெள்ளாதெரு முதல் காளி கோவில் வரை குறுகிய சாலை என்பதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் இருப்பதை சாலை பயனிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஜீயபுரம்
D S P -யின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை தொடர்ந்து ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர்
அறிவுரையின் படி சாலை ஓர பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் ஜீயபுரம் காவல் ஆய்வாளர் நேரில் பார்வையிட்டு பாராமரிப்பு பணிகளை முறையாக செய்திடவும், சாலை பாதுகாப்பினை உறுதி படுத்தி தக்க ஆலோசனை வழங்கியும், சாலை ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டும் குறைபாடுகளை களைய கேட்டு கொண்டார். சாலை பாதுகாப்பு பணிகளில் விரைந்து செயல் பட்ட ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசந்தர் மற்றும் ஜீயபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்களின் செயல்பாடுகள் அப் பகுதி சாலை பயனீட்டாளர்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றது.