திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரியக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று லால்குடி நகராட்சி பகுதியில் சுற்றித் திருந்த இரண்டு மாடுகளை சிறை பிடிக்க நகராட்சி பணியாளருக்கு ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடுகளை அணையரின் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளார்கள் சிறை பிடித்தனர்.