திருச்சி திருவானைக்காவல் அருகே பனையபுரம் திருபால்துறை ஹரிசன தெருவை சேர்ந்தவர் 42 வயதான சேதுபதி். இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் பக்கவாட்டுக்கட்டையில் எதிர்பாராதமாக மோட்டார் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுமதித்த சில மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.