குடியரசு தினத்தையொட்டி முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி ரயில் நிலையத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்று முதல் குடியரசு தின விழா முடியும் வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று மதியம் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அனைத்து பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை போட்டனர். சந்தேகத்திற்கிடமான பெட்டி, பேக்குகளை திறந்து சோதனை செய்தனர். லக்கேஜ்கள், பார்சல்கள் என அனைத்தும் மோப்பநாய் , மெட்டல்டிடெக்டர் கொண்டு சோதனை போட்டனர். சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் இந்த சோதனைியல் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். குடியரசு தின விழா முடியும் வரை இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.