திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என் நேரு இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வரும் மே 9ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் நேரு ஏற்பாட்டில் கிடா வெட்டி வழிபாடு நடந்ததாக ஒரு தரப்பினரும், அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மற்றொரு தரப்பினரும் கூறினர். கறி விருந்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை
- by Authour
