Skip to content
Home » திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27 )என்ற மனைவி உள்ளார். இன்று காலையில் திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து அருகில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக சென்றார். குடிநீர் எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். நடந்து சாலையை கடக்கும் போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து

ஜங்ஷன் நோக்கி அதி வேகமாக வந்த தனியார் பேருந்து இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரயில்வே ஊழியர் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!