திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தை சுற்றியுள்ள சுவரில் மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்தனர். தெற்கு ரயில்வே துறை சார்பாக சாரணர், சாரணியர் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 47 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த
போட்டியின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழலை பேணி காக்கவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் கல்லுக்குழி பொதுமக்கள் தாங்கள் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டி நடத்தப்பட்டது.