அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் துவக்கி வைத்தார். கண்டன உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
மாவட்டச் செயலாளர் அஞ்சுகம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் வழங்கினர்.
முற்றுகை போராட்டத்தின் போது இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு கொடுத்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர்
ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தையொட்டி ரயில் நிலையம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.