திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கல்லணை ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (56) இவர் பொன்மலை சதன் ரயில்வேயில் எலக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வெங்கடேசலு விற்கு அதிக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கல்லீரல் பிரச்சினை மற்றும் ஹார்ட் பிரச்சினை இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் வெங்கடேசலுவிற்கு சித்ரா என்ற மனைவியும் பார்த்திபன் என்ற மகனும் தனபவித்ரா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவெறும்பூர் கல்லணை சாலையில் உள்ள பயணியர் நிழற்குடையில் வெங்கடேசலு மர்மமான முறையில் இறந்து கடந்துள்ளார். இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் திருவெறும்பூர் எஸ்பிஐ ஏடிஎம் அருகே உள்ள வேன் ஸ்டாண்ட் அருகில் உடல்நிலை சரியில்லாமல் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அந்த முதியவர் சிகிச்சை பெற்று
வந்த சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் இல்லாமாப பறிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்