காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே குட்செட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்வு, வாகன வரி விதிப்பு 40% உயர்வு மற்றும் காலாவதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், அதிக பாரம் ஏற்றும் லாரி உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் வழக்கு விதிப்பது தவிர்க்க பட வேண்டும், மேலும் காலாண்டு வாகன வரி விதிப்பு டீசல் வரி விதிப்பு குறைக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் மட்டும் அடையாளம் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக இன்று திருச்சி ரயில்வே குட்செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. லோடு ஏற்றி சென்ற லாரிகளும் ஆங்காங்கு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.