திருச்சி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்கும் முன் நின்று இருபுறமும் ரயில் வண்டி வருகிறதா என்று கவனித்து பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும் .மூடி இருக்கும் ரயில்வே கேட்டைக் கடந்து செல்லக்கூடாது. ஓடும் ரயிலில்
ஏறவோ இறங்கவோ செய்யக்கூடாது. படிக்கட்டில் அமர்ந்தோ பயணம் செய்யக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் அபாயகரமான பொருட்களையும் ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு கடை பாதுகாப்பு ப்படை இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், ஹெட் கான்ஸ்டபிள் கனகராஜ், மற்றும் கான்ஸ்டபிள் பிரஜூல் வருகை புரிந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வு தலைமையாசிரியர் நளினா தலைமையில் நடத்தப்பட்டது.