திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம், அம்பிகாபுரம், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், நத்தமாடிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஆலத்தூர் பாலத்திலிருந்து மஞ்சத்திடல் செல்லும் சாலையில் இடதுபுறம் ஓரமாக நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே முட்புதரில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளையும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் 28 மூட்டைகளில் சுமார் 1400 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த நபரை கைது செய்து விசாரிக்கும்போது,அவர் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு ரோடு சுருளி கோவில் தெரு முருகன் மகன் ராதாகிருஷ்ணன் (40) என்பதும், மேலகல்கண்டார்கோட்டை கீழகல்கண்டார்கோட்டை ஆலத்தூர் ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இரவுநேர டிபன் கடைகளுக்கு விற்பதற்காகவும் மாட்டு தீவனத்திற்கு விற்பதற்காகவும் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து போலீசார் 28.ரேஷன் அரிசி மூட்டைகள்,இருசக்கர வாகனம் வழக்கு சொத்துக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..
- by Authour