திருச்சி மாவட்டம், முசிறி அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதாவின் உத்தரவின் படி திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் அறிவுறுத்தலின்படி ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் முசிறி வட்டார வழங்கல் அலுவலர் லதாவும் முசிறி அருகே உள்ள துளையாந்தம் புது காலணி சாலை அருகே இன்று விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 40 மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன் வட்டார வளங்கள் அலுவலர் மற்றும் போலீசார் முன்னிலையில் வாகனத்தையும் அதில் இருந்த ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்தது யார் என்று தெரியாததால் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.