தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் தொழிற்சங்க பயிற்சி முகாம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் செல்வராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான ரேசன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது நிறை, குறைகளை கூறினார்கள்.
மேலும் ரேசன் கடையில் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுவது குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தங்க பூமி, அண்ணாதுரை, கணேசன், பிரகாஷ், கார்த்திகேயன், சேட்டு, கோமதி, கண்ணன், போஸ், கந்தசாமி, ஆறுமுகம், லட்சுமணன், ரத்தினம், சடையப்ப வள்ளல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாநில துணை தலைவர் என்டி ராமசாமி நன்றி கூறினார்.