அரியலூர் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரசாந்த். இவர் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருச்சி லால்குடியை அடுத்த செம்பரையில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு பிரசாந்த் வந்துள்ளார். அங்கு வயிற்று வலியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரசாந்த்த எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.