இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ராணி மங்கம்மா மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொல்லியல் துறையில் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் மனு அளிக்கப்பட்டது. திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 12 வது வார்டு மெயின் ரோட்டில் புகழ்பெற்ற புரதான சின்னமான ராணி மங்கம்மா மண்டபம் இருப்பதாகவும் அந்த இடத்தினை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் ஆக்கிரமிப்பு கலையாகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த இடத்தினை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறி திருச்சி மாவட்ட சாமானிய மக்கள் நல கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் திருச்சி மெயின் கார்டு கேட்டு அருகில் உள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் புகார் அளித்தார்.