திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை..
திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாநகரை பொருத்தவரை ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே ரெட்டை மலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்சி மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது ராம்ஜிநகரைச் சேர்ந்த விக்னேஷ் (35) என்பவர் அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்திய போது அவர் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், ராம்ஜிநகரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரேமா, மகன் விசுவநாதன் ஆகியோருக்கும் இதில் தொடர்பிருப்பதும், அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்..