திருச்சியில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் இரவு பெய்த மழையால் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் 50 வருட பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. வேருடன் சாய்ந்த வேப்பமரத்தை மாநகராட்சி பணியாளர்கள் இயந்திரங்களை கொண்டு மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.