வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வௌியிட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் சிறுகுடியில் 1 மி.மீ, வத்தலை அணைக்கட்டு 1 மிமீ, மணப்பாறை-2.6 மி.மீ, பொன்னையார் டாம்-2.28 மி.மீ, மருங்காபுரி – கோவில்பட்டியில் 3.4 மி.மீ, மருங்காபுரி-5.2 மி.மீ, முசிறி-2.3 மிமீ, புலிவளம் 7 மிமீ, தா.பேட்டை-2 மிமீ, துறையூர்-1 மிமீ, திருச்சி ஏர்போர்ட் 0.4, திருச்சி ஜங்சன்-1 மி.மீ, திருச்சி டவுன் 0.6 மிமீட்டர் என மொத்தமாக 30.3 மிமீ திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 1.26 மிமீ பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.