ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும்.
2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019-ம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை. ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று திருச்சியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள்தீவிர பணியில் இறங்கி உள்ளன. தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு. எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ். எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்போல இந்த தேர்தலிலும் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டனர். இதனால் வாக்குப்பதிவு மையம் அருகே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைளிலும் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது.
10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருச்சி கோட்டத்தில் சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.