திருச்சி, ரயில் வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான 8 பேர் கொண்ட பாது காப்பு படையினர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி திருச்சி ரயில்வே ஜங்சனில் சோதனை மேற்கொண்ட னர். அந்த சோதனையில் ஒரு ரயில் பயணியிடம் கணக்கில் வராத சுமார் 2,796.04 கிராம் தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 230 ஆகும். இந்த தங்கத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர், வணிகவரித்துறை திருச்சி கோட்ட நுண்ணறிவு பிரிவில் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மூலம் அர சுக்கு சுமார் 20 லட்சத்து 84 ஆயிரத்து 945 ரூபாய் ஜஎஸ்டி வருவாய் கிடைத் துள்ளது. இந்நிலையில் இந்த சோதனை நடத்திய ரயில்வே பாதுகாப்புபடையினரை பாராட்டி திருச்சி கோட்ட வணிகவரி- நுண் ணறிவுப் பிரிவு இணை ஆணையர் ஜானகி, திருச்சி கோட்ட ரயில்வே மூத்த பாதுகாப்பு ஆணையரிடம் சான்றிதழ்களை வழங்கி யுள்ளார்.
கணக்கில் வராத ரூ.1.89 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், எஸ்ஐபி எப் சரவணன், ஏஎஸ்ஐ செல்வராஜ், ஏஎஸ்ஐபிஎப் சசிகுமார், தலைமை ஏட்டு இளையராஜா, செந்தில் முத்து, சதீஸ்குமார் மற்றும் ஜெயவேல் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்வழங் கப்பட்டுள்ளது.