Skip to content
Home » திருச்சி-புளியஞ்சோலையில் வாகனங்கள் நுழைய கட்டாய வரி வசூல்….

திருச்சி-புளியஞ்சோலையில் வாகனங்கள் நுழைய கட்டாய வரி வசூல்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், உப்புலியபுரம் காவல் நிலைய சரகத்துகுட்பட்ட பச்சபெருமாள் பட்டி ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சோலை பகுதியில் வாகனங்கள் நுழைய ஒப்பந்ததாரர்களால் வரி வசூலிக்கபட்டு வருகிறது.

வரி வசூலிக்கும் நபர்கள் வாகன ஓட்டிகளிடம் அநாகரியமாக நடந்து கொள்வதும் மற்றும் ஆபாச வார்த்தைகளால் பேசுவதும் மற்றும் உள்ளுர் வாகன ஓட்டிகளிடம் வரி வசூல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேற்கண்ட செயல்களால் அப்பகுதியில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் அப்பகுதி சமூக ஆர்வலரும் சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளருமான பொறியாளர் சுந்தர்ராஜன் மேற்கண்ட குறைபாடுகள் தொடர்பாக உப்புலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு உள்ளது.

மேற்கண்ட மனு தொடர்பாக உரிய விசாரணை செய்து வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழா வண்ணமும், வரி வசூல் செய்யும் இடத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு விதிகளின் படி வரி வசூல் தொடர்பான அறிவிப்பு பதாகை வைக்கவும் சம்பந்த பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!