திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி ஆர்சி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (47)இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ்க்கு தகவல் கிடைத்தது உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது வீட்டில் 110 கிராம் புகையிலை 28 கிராம் கூலிப் 900 கிராம் ஹான்ஸ் உள்ளிட்ட ரூபாய் 1500 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து அவரைப் பிடித்து எடமலைப்பட்டி புதூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் திருச்சி சூப்பர் பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் சோதனை நடத்திய போது ரூபாய் 1000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது அதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடையின் உரிமையாளர் திருச்சி காந்தி மார்க்கெட் ஜின்னா தெருவை சேர்ந்த சாதிக் (வயது 44) என்பவரை கைது செய்தனர்.