திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே மஞ்சமேடு கிராமம் அமைந்துள்ளது.

இங்கு அரசு ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒருதலைமையாசிரியரும், ஒரு உதவி ஆசிரியரும் பணியாற்றுகின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்த கட்டிடத்தை தமிழக அரசால் இடிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த அரசு பள்ளி நிர்வாகம் அந்த வீட்டில் பள்ளியை நடத்தி வருகிறது. வகுப்புகள் நடைபெறும் இடம் தனியாருக்கு சொந்தமான வீடு என்பதால் அதற்கு வாடகையாக 25 மாணவர்களிடம் மாதம் தலா 200 வசூலித்து அதில் கிடைக்கும் தொகையை கொண்டு கடந்த எட்டு
மாதங்களாக வாடகை பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீசார் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகூடம் நிரந்தர கட்டிடத்தில் இயங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து பெற்றோர்கள் சாலை மறியலில் கைவிட்டு கலந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.