சுமார் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்பட்டு வந்துள்ளது , என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் கற்சிலைகள் சான்றுகளாக உள்ளது.
இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அறியப்படுகிறது. வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமஸ்கிருத சொல்லில் இருந்து யோகா என்ற சொல் வந்ததாக கூறுவது உண்டு. மூச்சை இழுத்து வெளியே விடுவதன் மூலம் உடலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைத்து, மூளையும் சுறுசுறுப்படைகிறது.
நமக்கு நாமே சிகிச்சை செய்து கொள்வதைப் போன்றது
மனதில் இருக்கும் நேர்மறையான எண்ணங்களை விரட்டும். உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும்
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு புதிய சக்தியைக் கொடுக்கும்
பெரிய அளவில் புதிய விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு உங்களுக்கு வழி குணமடையும், கூர்மையான எண்ணங்கள், மனதை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்லது
மன அழுத்தத்தை குறைக்கும். உடல் வளைவு தன்மையைக் கொடுக்கும்
சிறந்த உறவுகளை மேற்கொள்வதற்கு யோகா உதவும்
மனதையும், உடம்பையும் ஒருங்கிணைக்கும்
ஜீரண சக்தியை அதிகரிக்கும்
அடி வயிற்றுக்கு வலிமை கொடுக்கும்
மூட்டு வலி குணமடையும், யோகா செய்வதன் மெல்லாம் தனிப்பட்ட நபர் தனது மனதையும், ஆன்மாவையும் ஒருங்கிணைக்க முடியும். மன அழுத்தம் வெளியேறும், மனது லேசாகும். உடலுக்கு ஆக்சிஜன் சீராக செல்வதால் உடல் புத்துணர்வு பெற்று சுறு சுறுப்படையும். தசைநார்கள் வலுப்பெறும். சருமம் புத்துணர்வு பெறும்.
தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 36 மில்லியன் மக்கள் யோகாவில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நீங்களும் யோகா செய்து நீண்ட ஆரோக்கியம் பெறலாமே.
முதலில் குறிப்பாக குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் யோகா பயிற்சியை கற்றுக் கொள்வது மூலம் உடல் நலம் மட்டுமல்லாமல், அறிவுத்திறனும் நன்கு வளரும். ஆகையால் இன்று திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த யோகாசனத்தை செய்து காண்பவர்களை ஆச்சரியப்படுத்தினர். இதனை தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டது. இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளை தேசிய அளவிலான யொக போட்டியில் பங்கேற்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.